உலக நாகரிகங்கள், பண்பாடுகள் ஆற்றங்கரையை ஒட்டியே வளர்ந்தன. ஆற்றைப் புனிதமாகக் கருதும் போக்கு தொன்றுதொட்டு நிகழ்ந்து வருவதாகும். இந்த அடிப்படையில் தாமிரபரணி ஆற்றின் வரலாற்றையும், அதன் கரையில் உள்ள கோவில்கள் பற்றியும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆற்றின் பெருமையை மகாபாரதம் எடுத்துக் கூறியுள்ளது. பக்கிள் துரை என்ற ஆங்கிலேயர், ஸ்ரீவைகுண்டம் அணையைக் கட்டி அப்பகுதி மக்கள் இதயங்களில் மதிப்புப் பெற்றதன் காரணமாக, அந்த பகுதி குழந்தைகளுக்கு அவரது பெயரைச் சூட்டி நன்றிக்கடன் புரிந்துள்ளனர்.
பொதிகை மலை பற்றிய தகவல்கள் அரிய கருத்துகளைக் கொண்டுள்ளன. அங்கு உலகத்தின் முன்னோடியாக கருதப்படும் மூலிகைச் செடிகள் எல்லாம் உள்ளன. பொதிகை மலையில் வாழும் பழங்குடிகளான காணி இன மக்களைப் பற்றிய அரிய தகவலை இந்நுாலில் காணலாம். தாமிரபரணி நதியைச் சுற்றியுள்ள கோவில்கள், நடைபெறும் விழாக்கள், புராண காலத்தோடு தொடர்புடைய செய்திகள் நிரம்பியுள்ளன.
– ராம.குருநாதன்