கணிதம் என்றாலே சிலருக்கு கசக்கும். இருந்தாலும் தேர்வில் முழு மதிப்பெண் பெற உதவுவதும் அதே கணிதம் தான். அத்தகைய கணிதம் நம் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. நம்மை அறியாமலே பல விஷயங்களில் இந்த கணிதம் முக்கிய பங்காற்றுகிறது.
நாம் அதிக அளவு பயன்படுத்தும் வார்த்தைகள் இந்த கணித விதிக்கு உட்பட்டே அமைகின்றன. நகரங்களில் ஏற்படும் நெரிசலையும், பயண நேரத்தையும் குறைக்க கணித ரீதியாக முடிவெடுக்கலாம். நதிகளின் பாதை கணித விதிப்படியே அமைகின்றன.
இதுபோல் வெப்பநிலை, கடிகாரங்களின் கணித பண்புகள், நாம் பயன்படுத்தும் காலணி உறைகள், ஒளிப்படத்தின் நேர்த்தி, பூவின் தன்மை மற்றும் நாம் இன்று அடிக்கடி பயன்படுத்தும் ‘ஓடிபி’ எண்கள் இவை அனைத்துமே எப்படி கணித விதிப்படி அமைகின்றன என்பதை, இந்த நுாலின் ஆசிரியர் சிவராமன் எளிய தமிழில் அதே நேரத்தில் ஆதாரப்பூர்வமாக விளக்கி இருக்கிறார்.
நாம் இதுவரை அறிந்திராத பல கேள்விகளுக்கு, இந்த புத்தகம் சிறந்த விடை தருவதாக அமைந்துள்ளது.
– இளங்கோவன்