நிலம் அதை உடைமையாக்குவது பற்றி மிக விரிவாக எழுதப்பட்டுள்ள நுால். ஆவணப் பதிவு முறையில் இருந்து துவங்குகிறது. அந்த நடைமுறையின் போது தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களை மிக எளிமையாக தொகுத்து உள்ளார் ஆசிரியர்.
அடுத்து, நிலம் தொடர்பான அங்கீகார அமைப்புகள் பற்றிய விபரம் தரப்பட்டுள்ளது. நகர் ஊரமைப்பு இயக்குனரகத்தில், மனைக்கான அங்கீகாரம் பெறுவது பற்றிய விபரங்களும் தரப்பட்டுள்ளன. பத்திர ஆவணங்கள், கிரயப் பத்திர மாதிரிகளும் தரப்பட்டுள்ளன.
நிலத்தை பாகம் பிரிக்கும் வகை முறை, கிரய ஒப்பந்தத்தில் கவனம் செலுத்த வேண்டியவை, பவர் ஆப் அட்டர்னி பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை உள்ளிட்ட தகவல்கள் சிறப்பாக தொகுத்து எழுதப்பட்டுள்ளன.
நில உடைமையாளர்களும், நிலத்தை உடைமை கொள்ள விரும்புவோரும் வைத்திருக்க வேண்டிய கையேடு இந்த நுால்.
– ராம்