குழந்தைகளுக்கு புத்தி கூற வேண்டியதில்லை; அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு, எரிச்சல் அடையாமல் பதில் கூறினாலே போதும் என்பதை உணர்த்தும் நுால்.
குழந்தைகளுக்கு...
* இரண்டு வயதில், கல்வி சுமை ஏற்றுவது சரியா
* பக்கத்து வீடு, உறவினர்களிடம் ஒப்படைத்து விட்டு, கணவனும் மனைவியும் பணிக்கு செல்வது நியாயமா.
இதுபோன்ற கேள்விகளை எழுப்புகிறது.
குழந்தையை சரியாக வளர்க்கிறேனா என நெருடல் ஏற்படுத்தும் உரையாடல்கள் ஏராளம்.
இளம் குற்றவாளிகள் அதிகரிக்க, வரம்பு மீறிய செல்லம், நடத்தை மீறும் பெற்றோர் என காரணங்கள் சொல்லப்படுகின்றன.
ஐந்து ரூபாய்க்கு ஆப்பிள் வாங்கி சொல்லி கொடுப்பதை விட்டுவிட்டு, அதே ஆப்பிளை தெரிஞ்சுக்க லட்சங்கள் செலவு செய்கிறாய்; இது உன் தலையெழுத்து என, மகன், அப்பாவிடம் கேட்பது மனப்பாட கல்வியை வேரறுக்கிறது.
நுால், அன்றாடம் புழக்கத்தில் உள்ள உரையாடல்களுடன் அமைந்துள்ளது. குழந்தைகளை எப்படி வளர்க்கிறோம் என்பதை தெரிந்து கொள்ளும் நுால்.
– ராமர்