இருபதாம் நுாற்றாண்டில் தமிழகத்தில் ஏற்பட்ட எழுச்சியை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ள நுால். அயோத்திதாசர், ஈ.வெ.ரா., முதலான தலைவர்களின் எழுச்சிச் சிந்தனைகளுடன் அம்பேத்கரின் அரசியல் சிந்தனையையும் தெளிவாக எடுத்துரைக்கிறது.
சாதி ஒழிப்பை அடிப்படையாகக் கொண்டே எழுச்சிக் குரல்கள் எழுந்தாலும் சாதி மேனிலையாக்கம் தொடர்பான முயற்சிகளும் எழுந்து சில சாதிகள் மேனிலை பெற்றன. மத மேனிலை தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபாடு கொண்ட உயர் வகுப்பினருடன் தாழ்ந்த வகுப்பினரும் இணைந்து செயல்படும் நிலையும் மாற்றமே.
பொருளாதார மேம்பாட்டால் சாதியத்தை ஒழித்துவிட முடியும் என்பதும் முழுமையானது அல்ல என்பது உட்பட பல சிந்தனைகளை அரசியல் வெளிப்பாடாகத் துல்லியமாக எடுத்துரைக்கிறது. காரண காரியங்களோடு எடுத்துரைக்கும் மொழிநடையால் உண்மைத் தன்மையை ஊட்டுகிறது. இருபத்தோராம் நுாற்றாண்டில் அரசியல் சிந்தனைப் போக்கின் நோக்கை எடுத்துரைக்கும் நுால்.
– முகிலை ராசபாண்டியன்