வான சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டு, வராஹமிஹிரர் ஜோதிட சாஸ்திரத்தை எழுதினார் என்பர். வராஹமிஹிரர் எழுதிய பிருஹத் ஸம்ஹிதையின் தமிழாக்கமே இந்த நுால். சூரியன் சுழற்சியால் ஏற்படும் இயற்கை பாதிப்பால், மனிதர்களும், நாடும் பாதிக்கின்ற விபரங்களைக் கூறுகிறது.
வான சாஸ்திர நிபுணர்களின் குணங்களையும், தகுதிகளையும் குறிப்பிட்டுள்ளார்; சூரியன் முதல் சனி வரை கோள்கள், கிரஹங்களின் சேர்க்கை குறித்தும் விளக்கியுள்ளார். மழைக்கு அனுகூலமான நாட்கள், ரோகிணி, ஸ்வாதி, ஆஷாடி யோகங்கள் எரி நட்சத்திரம், வானவில், இடி, காய்கறிகளின் ஜாதகம், இந்திரனின் கொடி, காஞ்சனப் பட்சி, சகுனங்கள் குறித்த செய்திகள் பயனுள்ளவை.
ஜோதிடம் அறிய விரும்புவோருக்கு வழிகாட்டும் நுால்.
– டாக்டர் கலியன் சம்பத்து