யோகமானது தீட்சை கிடைத்த சிலருக்கே உரித்தாக இருந்தது; ஆனால், இன்று பல நாடுகளிலும் பிரபலம் ஆகியுள்ளது. யோகம் தொடர்பாக ஸமாதி பாகம், ஸாதனபாதம், விபூதிபாதம், கைவல்யபாதம் என நான்கு பிரிவுகளில் அமைந்துள்ளது இந்த நுால்.
யோகம் என்பது என்ன என்றும், சித்தத்தில் உண்டாகும் விருத்திகள், வைராக்கியத்தின் சொரூபம் மற்றும் ஈசுவர சொரூபம் பற்றி விரிவாக விளக்கும் நுால்.
கர்மயோகம், அஸ்மிதா, கர்மாசயம், த்ரஷ்டா, மஹாவ்ரதம், நியமம், நியமஸித்தி, ஆஸனம், ப்ரத்யாஹாரம், தாரணா, சித்த பரிணாமம், ஸமாதி பரிணாமம், பிராணிகளின் பாஷையை அறிதல், பிறர் சித்தத்தை அறிதல், மரண காலத்தை அறிதல், நீர் மேல் நடத்தல், ஆகாசத்தில் பறத்தல், பிரதிபந்தகம், வாஸனைகள், ப்ரத்யஷ ப்ரமாணம், கைவல்யத்தின் சொரூபம் போன்றவை விளக்கப்பட்டுள்ளன.
யோகசாஸ்திரம் பயில விரும்புவோர் படித்து பயன் அடையலாம்.
– டாக்டர் கலியன் சம்பத்து