சிறு வயது, இளைமைக்கால குணத்தையும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் வாழ்வையும் விவரிக்கும் நுால். ஐந்து வயது முதல், குழந்தை எப்படி வளர்கிறதோ, அதே குணம் தான், வயதான பிறகும் இருக்கும்.
பொருளாதார தேடலில் மட்டுமே நேரத்தை செலவிடும் பெற்றோர், தனக்கான சில மணி நேரம் ஒதுக்கமாட்டார்களா என ஏங்கும் குழந்தைகள் மனதையும், திருமணமாகி மருமகளுடன் இருக்கும் மகன், தினமும் ஒரு முறையாவது பேசமாட்டானா என ஏங்கும் வயதான பெற்றோரின் ஏக்கத்தையும் கூறு போடுகிறது.
மொத்தம் 40 தலைப்புகளில் நாட்டு நடப்பை அலசிய எழுத்துக்கள், வாசிக்க சுவாரசியத்தை ஏற்படுத்துகிறது.
– டி.எஸ்.ராயன்