சற்று சிந்தித்துப் பாருங்கள்... 1750ம் ஆண்டு துவங்கி 1800ம் ஆண்டுகளில் ஆங்கிலேயர்களை இந்தியாவில் இருந்து விரட்டி இருந்தால் இந்தியா மட்டுமல்ல, உலகின் நிலைப்பாடு எவ்வாறு இருந்திருக்கும். 200 ஆண்டுகளுக்கு முன்னரே உடைந்திருக்கும் உலகின் வல்லதிகாரம். ஒழிந்திருக்கும் அடிமைத்தனம். இரு உலகப்போர்கள் நடந்தே இருக்காமல் போயிருக்கலாம் அல்லவா!
உலகிலேயே முன்னேற்றம் அடைந்த வல்லரசு நாடாக அமெரிக்கா இருப்பது போல் இந்தியாவும் வல்லரசு நாடாகத் திகழ்ந்திருக்கக்கூடுமோ? உலகில் இன்னும் என்னென்ன மாற்றங்கள் வரக்கூடும் என்று கற்பனை செய்து பாருங்கள்! கற்பனை செய்து பார்க்கப் பார்க்கப் பேரானந்தம்!
இவ்வாறு நடக்கத் தவறிய வரலாற்றின் கற்பனைக் காவியம் தான் இந்தக் கதை. இது சொல்லும் எந்த நிகழ்வும் நிஜத்தில் நடக்கவில்லை. ஆனால் நடந்திருந்தால் ஆங்கிலேயரை 18-ம் நுாற்றாண்டிலேயே விரட்டியடித்திருந்தால் உலகம் எவ்வாறு இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள் என வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாற்றைக் கற்பனை கலந்து எழுதியுள்ளார். இப்புதினம் இயல்பான நடையோட்டத்துடன் அமைந்துள்ளது.
நீண்டகால உறக்கம், சித்திரா பவுர்ணமி, வீரவேல் வெற்றிவேல் முதலான குறுந்தலைப்புகளுடன் விறுவிறுப்பாக கதையை நடத்திச் செல்லும் விதம் அருமை. சிறப்பான கதை முடிவுடன் இப்புதினம் பல்வேறு சுவையான நிகழ்வுகளைக் கற்பனையோட்டத்துடன் விரித்துக் செல்கிறது.
– ராமலிங்கம்