திருமந்திரத்தில், சக்கரம் குறித்து வரும் பாடல்களைத் தேடி ஆராய்ந்து தந்துள்ள நுால். மந்திரங்கள், தெய்வம், மருந்து, குருவருள், சாத்திரங்கள், ஞான உபதேசங்கள், சக்கரங்களை நம்புவோருக்கு பயன் அளிக்கும் என்று நீதி நுால்கள் கூறுகின்றன. திருமந்திரத்தில் உள்ள சக்கரங்களை யந்திரமும் தந்திரமும் என துவங்கி, மறை மொழி என்ற 27- கட்டுரையோடு நிறைவெய்துகிறது.
மந்திரமும் தந்திரமும், திருவம்பலச் சக்கரங்கள், பிரணவச் சக்கரம், பஞ்சபூதச் சக்கரம், சிவச் சக்கரம், ஆறு ஆதார நிலைச் சக்கரம், ஸ்ரீசக்கரம், வயிரவச் சக்கரம் போன்ற தலைப்புகளில் திருமந்திர தகவல்களோடு, சக்கரத்திற்குரிய மூலமந்திரமும் தரப்பட்டுள்ளது.
யந்திரம் என்பது இயக்குதல், கருவி, பொறி எனப் பொருள்படும். பீசம் முதலியன முறைப்படி வரையப்பட்டு, வழிபடப் பெறும் சக்கரம் என்பதாகும். திரு அம்பலச் சக்கரங்கள் என்ற தலைப்பில் ‘சிவாயநம’ என்ற ஐந்தெழுத்தைப் பொறித்து, வழிபடும் முறைகளையும் விரிவாகத் தந்துள்ள நுால்.
– புலவர் இரா.நாராயணன்