மூன்று தலைமுறையினரின் கதை தெய்வம் தந்த பிள்ளை. இது தலைப்பு கதையாக உள்ளது. ஒரு குடும்பத்தில் கால மாற்றத்திற்கு ஏற்ப என்னென்ன நிகழ்கின்றன என்பதை சொல்லுகிறது. மொத்தம் ஐந்து கதைகள் உள்ளன.
பெரும்பாலானவற்றில் நகரத்தார் பார்த்து வளர்ந்த பிராமணர் குலத்து பின்னணியும் உள்ளது. நான்காவது கதையில் கமலாயி அக்கா கணவனை இழந்தவள். ஒரு ஜோசியரை வீட்டோடு குடித்தனம் வைத்திருக்கிறாள். அவர்களது தொடர்பு தெரிந்து வளர்ந்த மகன் வீட்டை விட்டு வெளியேறுகிறார். அந்த வாழ்க்கையை விடவும் முடியாமல் மகனைத் தேடவும் முடியாமல் தவிக்கிறாள். சின்ன நிகழ்ச்சிகளை கதை அம்சத்தோடு படைத்திருக்கிறார்.
– சீத்தலைச் சாத்தன்