இச்சிறுகதைத் தொகுதியில் மொத்தம் 12 கதைகள் இடம் பெற்றுள்ளன. சமூக அக்கறையும், மனிதாபிமானமும் நிறைந்த கதைக் களத்தைக் கொண்டு நேர்த்தியாக வடித்துள்ளார். தாயில்லாத குழந்தையின் ஏக்கத்தையும், அக்குழந்தையின் தவிப்பையும் ‘சிதறல்கள்’ கதையில் படம் பிடித்துக் காட்டியுள்ளார். ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையின் மீது பெற்றோர் கொண்டுள்ள பாசத்தையும், அக்குழந்தையின் மீது சமூகம் கொண்டிருக்கும் அலட்சியத்தையும் ‘புரிதல்கள்’ கதையில் புரிய வைக்கிறார்.
பள்ளிச் சிறார்களைக் கடத்திப் பிச்சை எடுக்க வைக்கும் கும்பலில் உள்ள ஒரு குழந்தையினை கருணை உள்ளத்தோடு மீட்டெடுத்து உருகி உருகி வளர்த்து சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கித் தரும் சூழலை ‘தேடுதல்’ கதை நமக்கு புரிய வைக்கிறது. இது போன்று 12 கதைகளும் சமுதாய அக்கறையோடு புனையப்பட்டுள்ளன. சிறந்ததொரு சிறுகதைத் தொகுதியை நிறைவாக வழங்கியுள்ள ஆசிரியர் பாராட்டுக்குரியவர்.
– வி.விஷ்வா