மனிதனுக்குள் பொதிந்திருக்கும் பிரபஞ்சத்தைப் பற்றிய ரகசியங்கள் மற்றும் படைப்பாற்றல் விந்தைகளை அறியும் வகையில், ஆனந்த யோகப் பயிற்சிகளை விளக்கும் பதஞ்சலி அஷ்டாங்க யோகம் மற்றும் பஞ்ச வாயுக்கள், திருமூலரின் பரியங்க யோகம் போன்றவற்றை உள்ளடக்கிய குண்டலினி தந்திர யோகம் ஆகியவற்றை இணைத்து யோகக் கலையை எடுத்துரைக்கும் நுால்.
யோக மூச்சின் கால அளவு மாத்திரைகளைத் தந்து, பிராணாயாமம், தியானம், மூச்சற்ற இடைவெளி, எண்ணமற்ற இடைவெளி எனும் நான்கு நிலைகளையும் குறிப்பிட்டுப் படைப்பாற்றலின் ரகசியத்தை யோக விழிப்புணர்வால் அறியக்கூடிய சாத்தியக் கூறுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஆசனங்களின் வகைகள், பிராணாயாமக் கலை, நாடிகள், நாக சக்தி, குண்டலினி எழுச்சி, குண்டலினியோகம், அந்தரங்க யோகம், தந்திர யோகம் போன்ற அனைத்தும் திருமந்திரம், திருக்குறள், தாயுமானவர் பாடல் போன்றவற்றின் மேற்கோள்களோடு விளக்கப்பட்டுள்ளன. படித்துப் பயன்பெற வேண்டிய நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு