பண்பாட்டுக் கலப்பால் ஒரு சமுதாயத்தின் கலை, இலக்கிய, சமய, தத்துவச் சிந்தனைகளில் ஏற்படும் ஒருமைப்பாட்டையும், இலக்கிய ஒருமையால் ஏற்படும் பண்பாட்டுக் கலப்பையும் ஆய்ந்து, தமிழ்ப் பண்பாட்டின் பெருமையை சித்தரிக்கும் நுால்.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளோடு கீழை நாடுகளின் சமயம், வணிகம் போன்ற பரிமாற்றங்களால் ஏற்பட்ட தாக்கங்களை விவரித்து, தமிழிலக்கிய மரபில் உள்வாங்கப்பட்ட கருத்தியல்களும், பவுத்தச் சிந்தனைகள் பரவியபோது ஏற்பட்ட புதிய பரிமாணங்களும், இஸ்லாமிய கோட்பாடுகளின் கலப்பில் வந்த போக்குகளும், கிறிஸ்துவ கோட்பாடுகள் கலந்து வந்த மாற்றங்களும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
நெகிழ்ந்து தரும் தன்மையால் தமிழ்மொழியும் பண்பாட்டுக் கூறுகளும் உலகளாவி படர்ந்திருப்பதை காட்டும் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு