அருள் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர்., நகர், சென்னை-78. (பக்கம்: 144)
நூலாசிரியர் தனது விமர்சனப் பார்வையை திருவள்ளூரில் தொடங்கி சுத்தானந்த பாரதியார் வரை, படர விட்டிருக்கிறார். 23 கட்டுரைகள் நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தியிருக்கிறார். பழங்காலம், இடைக்காலம், புதுமைக்காலம், விவாதங்கள் என நான்கு தலைப்புகளில் கட்டுரைகளைப் பிரித்து வழங்கியிருக்கிறார். ஆசிரியரின் வாசிப்பு அனுபவங்கள் நாடு, மொழி கடந்து தனது எல்லையை விரிவுபடுத்திக் கொண்டிருப்பதால், வாசகனுக்கு கிடைக்கும் அனுபவமும் அகன்று விரிந்து எல்லையின்றி வியாபிக்கிறது. சித்தர்கள், துளசிதாசர், மார்கிஸ், கார்க்கி, பிரேம்சந்த், சில மொழிபெயர்ப்புக்கள், பாரதி என ஆசிரியர் பல்துறை வல்லுனர்களிடம் நம்மை கைப்பற்றி அழைத்துச் செல்கிறார். ஐந்தாண்டு காலக் கட்டத்தில் ஆசிரியரால் எழுதப்பட்ட பல கட்டுரைகள், இத்தனை நேர்த்தியாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதே ஆச்சரியத்தைத் தருகிறது. தமிழனின் வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமான பல தகவல்களைத் தரும் புத்தகம் இது.