பஞ்சதந்திரம் காப்பியக் கதாநாயகியர் பற்றிய கற்பனையான நாடக நுால். ஐந்து காட்சிகள் உள்ளன. பூலோகத்திலிருந்து சூர்யா என்ற பெண் நிருபர் மேலோகம் சென்று எல்லா காவிய நாயகியரையும் சந்தித்து, சிந்திக்க வைக்கும் கேள்வி கேட்டு பதில் பெறுகிறார். இவர்கள் கூறும் பதிலில், குமுறலும் நகைச்சுவையும் குழைந்து வருகின்றன.
புராணம், வைதிகம், ஆன்மிகம் ஆகியன பெண்களின் வளர்ச்சிக்கு எவ்வாறு தடைகளாய் இருந்தன என்பதற்கு விடை தருகிறார். பெண் உரிமை, சமூக மாற்றத்திற்கு குரல் கொடுத்த பாரதியார், பாரதிதாசன் போன்றோரை மறவாமல் முன்னிலைப்படுத்தி உள்ளார்.
காரைக்கால் அம்மையார், ஆண்டாள், அவ்வையார், மீரா சந்திப்பு சிறப்பு. பெண்களுக்கு உரிய எல்லா உரிமைகளும் முழுமையாக கிடைக்க வேண்டும். சுதந்திரமாக எல்லாத் துறைகளிலும் பெண்கள் சாதிக்க வேண்டும் என பரப்பும் சிறப்பான நாடக நுால்.
– முனைவர் ம.கி.ரமணன்