வீரம், காதல், பகை இவைகளை மையமாக வைத்து எழுதப்பட்ட மூன்று நாடகங்கள். மூன்றிலும் முக்கியமாக பொறாமைதான் மையப்புள்ளி. சோழஎதிரியை வீழ்த்த தன்னையே பகடைக்காயாக ஆக்குகிறார் ஒரு பெண். அவள் மையலில் விழுந்த ஆகவ மல்லன் தன் சொந்த மகனையும் எதிர்த்து என்ன ஆனான் என்பதை சொல்கிறது. கவி காளிதாசனை மணப்பதற்காக காதலியை பலிகடா ஆக்கிய பெண்ணை ‘தாய்வீடு’ நாடகமும் நன்கு படைக்கப்பட்டுள்ளது.
கணவனைக் கொன்றவனை பழி வாங்க காத்திருந்த பெண், அந்தப் பகைவனாலேயே தன்மானம் காத்த நிகழ்ச்சி சொல்லும் நாடகம் சிறப்பு.
– சீத்தலைச் சாத்தன்