அடித்தட்டு மக்களின் பிரச்னைகளை கருப்பொருளாகக் கொண்டு உருவான 10 சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
சாதாரண நிலையில் உள்ள மனிதர்களின் பேச்சு நடை, கதைகளில் சொல்லப்படுகிறது. கட்டட வேலைக்கு ‘சென்ட்ரிங்’ போடும்போது கட்டப்படும் சவுக்கு மரம், சென்ட்ரிங் பிரிக்கப்படும் போது இழுத்துப் போடப்படும் விதம் சவுக்கு மரத்தின் புலம்பல் தான். தேவைக்கு மட்டும் பயன்படுத்துவதும், பின் கருவேப்பிலை ஆக்குவதும் மனித குணம்.
திருமணம் பேசி முடித்த பின், பிடித்தவனுடன் ஓடிப்போகும் பெண்ணும், அவளுக்காக பாடுபட்ட அண்ணன் தவிப்பும் நடைமுறை உண்மை. சரியான விதத்தில் எழுதி இருக்கிறார்.
– சீத்தலைச்சாத்தன்