ராமனின் பெருமைகளை, கம்பர் கவிதையிலும், கோவில் சிலைகளின் மூலமும், சற்குரு தியாகராஜர் கீர்த்தனைகள் வாயிலாகவும் விளக்கும் நுால். ராமனின் கால் வண்ணச் சிறப்பு, சீதையை முதன்முதலாக ராமன் நோக்கிய காட்சி, வில்லை வளைத்து ஒடித்தது, கானகம் சென்றது, அனுமன் வாக்கைக் கூறுவது போன்றவற்றில் உள்ள ஈடுபாடு கம்பரின் காவிய நடையை தெரிவிக்கின்றன.
குடந்தை, தேரழுந்துார், திருக்கண்ணமங்கை, திருக்கண்ணபுரம், வடுவூர், மதுராந்தகம் கோவில்களில் இருக்கும் ராமபிரான் சிலைகளை வரலாறு கூறி விளக்குவது பயனுள்ளதாக இருக்கிறது.
ராமபிரான் குறித்து தியாகராஜ சுவாமிகள் இயற்றியுள்ள 12 கீர்த்தனைகளைக் குறிப்பிட்டும், அதற்கு தக்க தமிழில் விளக்கமும் எழுதப்பட்டுள்ளது. இந்த பணி மிகவும் பாராட்டத்தக்கது. ராமபிரான் பெருமையை அறிந்து கொள்ள, ஆன்மிக அன்பர்களுக்கு பயன்படும் அருமையான நுால்.
– டாக்டர் கலியன் சம்பத்து