சமூக முரண், அடக்குமுறை, பெண் விடுதலை போன்ற பொருண்மைகளில் எழுதிய 12 கட்டுரைகளை திரட்டி தொகுத்து பதிப்பிக்கப்பட்டுள்ள நுால். மார்க்சியம், தலித் கல்வி, பெண்ணியம், சிலப்பதிகாரம், இலக்கண கோட்பாடு, நாவல் வகைப்பாடுகள், சிறுகதைப் போக்குகள், சமூக புறக்கணிப்பு, பாரதியின் அரசியல் நோக்கு, தொல் இலக்கியம், பாணர் பண்பாடு போன்றவற்றை பொருண்மைகளாக கொண்டு படைக்கப்பட்டுள்ளன.
இயக்கவியல் பார்வை குன்றிய மார்க்சியவாதிகள் பெண்கள் பிரச்னையை போதிய அளவு கவனிக்கவில்லை என்பதை குறிப்பிட்டு, பெண்ணியத்தை பற்றி விவாதிக்கும் பல்வேறு கருத்துகள் உள்ளன.
உயர்வகுப்பினர் ஆதிக்கம் செலுத்தும் ஒரு கட்டமைப்பில் பின்தங்கிய, அடித்தட்டு மக்களில் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் முன்னேறியவர்களாலும் செய்ய முடிவது ஏதுமில்லை என்பதாக குறிப்பிட்டு, அக்கருத்தியலை நிறுவும் வகையில் அரசியல் மற்றும் அதிகார களத்தில் நிலவும் உதாரணங்கள் தரப்பட்டு உள்ளன.
பாரதியின் அரசியல் பார்வைகளை காட்டும் கட்டுரை, பல்வேறு வரலாற்று உண்மைகளை வெளிப்படுத்தும் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு