கர்நாடக இசையின் தாய் ராகங்களான, மேளகர்த்தாக்கள் பற்றி எழுதப்பட்டுள்ள நுால். முதல் தொகுதியில், சுத்த மத்யமா ராகங்கள் எனப்படும், முதல் 36 ராகங்கள் கையாளப்பட்டுள்ளன. புகழ்பெற்ற பரத நாட்டிய நிபுணர் மற்றும் இசையமைப்பாளர் வித்யா பவானி சுரேஷ் விரிவாக எழுதியுள்ளார்.
ஒவ்வொரு மேளகர்த்தா ராகத்தையும் அணுக, படிப்படியான வழிகாட்டியாக அமைந்துள்ளது. ஒவ்வொன்றையும், சிறு கதையுடன் தொடங்குகிறார். இது, ராகங்களை எளிதாகப் புரிந்து கொள்ள உதவுகிறது. வாசிப்பை மகிழ்ச்சியான அனுபவமாக்குகிறது.
‘மேளகர்த்தாஸ்’ மிகவும் கடின பாடம் என்ற கருத்து உள்ளது. அந்த மனநிலையை உடைத்து, மகிழ்ச்சியாக அணுக வகை செய்துள்ளார். ராகத்தின் இசைக் குறியீடு, மேளகர்த்தா திட்டத்தில் அதன் இடம் ஆகியவை, எளிய நடையில் விவரிக்கப்பட்டுள்ளன.
செவ்வியல் என்ற கிளாசிக்கல் நடனம் மற்றும் இசை பற்றி, பல புத்தகங்கள் எழுதியவர் வித்யா. அந்த அனுபவத்தின் தொடர்ச்சியாக, நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், இந்த நுாலை படைத்துள்ளார். கர்நாடக இசையை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில், ஈடுபாட்டுடன் செய்யப்பட்டுள்ள முயற்சி.
– விஜய் சுப்ரமணியம்