பாரதியின் வாழ்க்கையிலிருந்து தொடங்குகிறது நுால். எத்தனையோ துன்பங்களை அனுபவித்தவர், ‘எத்தனை கோடி இன்பங்கள் வைத்தாய் இறைவா’ என பாடினார். வாழ்வில் சில நேரங்களில், மனிதர்கள் குழந்தைத்தனத்தைப் பெற்று விடுகின்றனர் என்ற யதார்த்தம் பளிச்சிடுகிறது. ஆசை தேவை தான், ஆனால் அந்த ஆசை வாழ்க்கை நிம்மதிக்குக் குறுக்கே நின்று விடக்கூடாது.
சாதனையாளர்களின் வெற்றி பற்றி விவரிக்கிறது. சுபாஷ் சந்திரபோஸ், நெல்சன் மண்டேலா, கார்ல் மார்க்ஸ், டால்ஸ்டாய் போன்றோரின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வாழ்க்கையை ஆராய்ந்து, அனுபவத்தோடு எழுதப்பட்ட நுால்.
– பேராசிரியர் இரா.நாராயணன்