பாரதியின் கவிதைகளில் விஞ்சி நிற்கும் நாட்டுப்பற்று முதலாக, நேர்காணல் வரை, 31 கட்டுரைகளின் தொகுப்பு நுால். அணிந்துரைகள், முகவுரைகள், வாழ்த்துரைகள், ஆய்வுரை ஆகியவற்றின் தொகுப்பாக அமைந்துள்ளது.
நுாலாசிரியரின் முந்தைய நுால்களை முழுமையாக தெரிந்து கொள்ள உதவுகிறது. பொதுவாக, பேராசிரியர்கள் பலர் ஓய்விற்குப் பின் எழுதுவதை விட்டுவிடுவர். ஆனால், இவர் நல்ல நுால்களை எழுதியுள்ளார். வரலாற்றுத் துறை மட்டுமின்றி, தமிழ் இலக்கியம், பக்தி, நவீன இலக்கியத்திற்கு, மிக சிறப்பானதொரு பங்களிப்பை அளித்துள்ளார்.
மவுனமாய் ஒரு மரணம், சில நிமிடங்களில் சில நிகழ்வுகள், இயல்பாய் இரு... இந்தியனாய் இரு, சுதந்திரப் போராட்டத்தில் ஓர் அற்புதம், திருமந்திரமும் பிற தமிழ் இலக்கியங்களும், அமெரிக்க – இந்திய மக்களின் வாழ்வும் பண்பாடும், அறிந்து கொள்ள வேண்டிய மனித உரிமைகள் என, வித்தியாசமான தலைப்புகளில் படைத்துள்ளார். எளிய நடையில், அனைவரும் விரும்பி படிக்கும் வகையில் உள்ளது.
– ராமலிங்கம்