வாழ்க்கையில் சந்தித்த இன்னல்களை அனுபவமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள நுால். ஆரம்பப் பள்ளியில் துவங்கி, பழகிய அத்தனை பாத்திரங்களையும், அனுபவ பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. நடுத்தர விவசாயக் குடும்பத்தில் பிறந்து, பொருளாதார ரீதியாக அனுபவித்த சிரமம், சண்டை சச்சரவு, உறவின் மனப்போக்கை பகிர்ந்துள்ளார்.
பிரசவத்திற்காக அரசு மருத்துவமனையை நாடியது, அங்குள்ளோர் நடந்து கொண்ட விதத்தையும் விவரித்திருப்பது, அடிவயிற்றை கலக்குகிறது. வாழ்க்கை இலகுவாகத் துவங்கிய கட்டத்தில், நோயை எதிர்கொண்ட விதம், மகன், மகள் திருமணம், பேரன், பேத்திகளுடனான கொஞ்சல் வரை பதிவாகியுள்ளது. கொங்கு வட்டாரத் தமிழ் நடை, கூடுதல் அழகு சேர்க்கிறது.
– மேதகன்