சென்னையில் இருந்து, கடல் மார்க்கமாக, 1,190 கி.மீ., தொலைவில் உள்ள அந்தமான் தீவு குறித்த சுற்றுலா கையேடு. இந்தியாவில் இருந்து வெகு தொலைவில் இருப்பதால், தீவுகளில் பயிர் வகைகள், உயிரினங்கள் அழியாமல், இயற்கை ஆதிக்கம் நிறைந்த பகுதி. 572 தீவுகள் இருந்தாலும், 38 தீவுகளில் தான் மக்கள் நடமாட்டம் உள்ளது போன்ற தகவல்கள் சுவாரசியம் தருகின்றன.
நிக்கோபாரிகள், ஒங்கி, செண்டினலீஸ், ஜரவா, சோம்பன் என்ற பழங்குடி இனங்களை சேர்ந்தவர்கள் வாழும் பகுதி, சுற்றுலா செல்ல உகந்த மாதம், அபர்டீன் டவர், அபர்டீன் துறைமுகம், சாத்தம் தீவு, கூண்டு சிறை, துாக்கு மேடை, ராஸ் தீவு, வேர்வலை பின்னிய சர்ச் போன்ற இடங்கள் பற்றி குறிப்பிடுகிறது. சுற்றுலா செல்ல திட்டமிட்டு, யாரை அணுக வேண்டும் போன்ற குறிப்பும் உள்ளது. அந்தமான் செல்ல விரும்புபவர்கள் வாசிக்க வேண்டிய நுால்.
– டி.எஸ்.ராயன்