தமிழகத்தில் உள்ள திருக்கோவில்களின் அமைவிடங்கள், முகவரிகள், தொலைபேசி எண்கள், செல்லும் வழிகள் என அனைத்து விபரங்களின் களஞ்சியமாக அமைந்துள்ள நுால்.
பாடல் பெற்ற 276 சிவாலயங்கள், சிவலிங்கத்தின் வகைகள், ஐந்து வகை சிவராத்திரிகள், ஐந்து வகை பிரதோஷங்கள், நந்தி விலகி இருக்கும் தலங்கள், 108 வைணவ திருத்தலங்கள், தசாவதாரங்கள், திருமால் நாமங்கள், கிருஷ்ணாரண்ய ஷேத்திரங்கள், அம்மன் கோவில்கள்.
விநாயகரின் உருவத் தத்துவம் தோஷம் நீங்கும் வகைகள், முருகனின் அறுபடை வீடுகள், நவ கிரகங்களுக்கான திருக்கோவில்கள், ஆஞ்சநேயர், பிரம்மா, பைரவர் என அனைத்து திருத்தலங்களின் முழுமையான விபரங்கள் நேர்த்தியாக தொகுக்கப்பட்டுள்ளன.
சிவபெருமான், முருகன், அய்யப்பன், திருமால் ஆகிய தெய்வங்களுக்கான 108 நாமாவளிகளும் இடம்பெற்றுள்ளன. தமிழகத்தில் உள்ள திருத்தலங்கள் மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்களில் உள்ள திருக்கோவில்கள் பற்றிய விபரங்களையும் தந்துள்ளார். ஆன்மிக சுற்றுலா செல்லும் அன்பர்களுக்குப் பெரிதும் உதவும் கையேடு.
– புலவர் சு.மதியழகன்