கதைகளையும், அனுபவக் கட்டுரைகளையும் ஒன்றாக தொகுத்து தரும் நுால். கதைகளை மூன்று தொகுதியாகப் பிரித்துத் தந்துள்ளார். முதல் பிரிவில் நிஜ அனுபவக் கதைகளையும், இரண்டாம் பிரிவில் கற்பனைக் கதைகளையும், மூன்றாம் பிரிவில் அதிகற்பனைக் கதைகளையும் தந்துள்ளார். கதை, கட்டுரைகளில் பிறமொழிக் கலப்பை தவிர்த்துள்ளார்.
படைப்பாளி அருகில் நின்று கதை சொல்வது போல் தோன்றுகிறது. கொச்சை நீக்கிய பேச்சு வழக்குச் சொற்களைப் பயன்படுத்தியுள்ளார். சென்னைக்கு வந்த மணியக்காரர் என்னும் கதையில், கோவைப் பகுதியைச் சேர்ந்த மணியக்காரர் ஒருவர் சென்னைக்கு வந்து மிகவும் எளிமையான விடுதியில் தங்கிச் சிக்கனமாக இருப்பதைப் பற்றி எழுதியுள்ளார்.
ஆனால் அதே சிக்கன ஆசாமி, வயிற்றுப்பாட்டுக்காக அல்லாடும் ஏழைகள் மேல் இரக்கம் கொள்வதை திருப்பு மையமாக அமைத்துள்ளார். கதைகளில் கருத்து வெளிப்படுவதுடன் எள்ளலும் கலந்திருப்பதைக் காண முடிகிறது.
– முகிலை ராசபாண்டியன்