திருத்தலங்களின் வரலாற்றுப் பின்னணிகளையும், சிறப்புகளையும், அனுபவங்களையும், இறை வழிபாடு சார்ந்த அரிய தகவல்களையும் தொகுத்துப் பதிவு செய்துள்ள ஆன்மிகப் பயண நுால்.
திருக்கோவில்களின் மகிமை, தல வரலாறு, மூலவர் பெருமை, கோவில் அமைப்பு, வழிபாட்டு முறைகள், பின்னணிக் கதைகள், திருவிழாக்கள், நிகழ்ச்சிகள் போன்றவற்றைத் தந்திருப்பது, இறையன்பர்களைப் பயணம் மேற்கொள்ள துாண்ட வல்லவை. மண்டல வாரியாக நவ கிரக கோவில்கள், அம்மன் கோவில்கள், சைவ, வைணவ கோவில்கள் என செய்திகளை விளக்கியிருக்கும் முறை வரவேற்கத்தக்கது.
அங்கங்கு சிற்சில வரலாற்றுத் தகவல்களோடு அகழாய்வு மற்றும் கல்வெட்டு விபரங்களும் விரவிக் கிடக்கின்றன. சில திருத்தலங்கள் பற்றிய இடைவிடாத தகவல் தேடலில், ‘தினமலர்’ ஆன்மிக மலர் வாயிலாக அரிய தகவல்கள் கிட்டியதை பதிவு செய்துள்ளது கவனிக்கத்தக்கது. புகழ் பெற்ற பல திருத்தலங்களுக்கு நேரில் சென்று வந்த உணர்வை ஏற்படுத்தும் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு