பகவத்கீதையின் 18 அத்தியாய கருத்துகளுக்கு ஏற்ப, 18 கதைகளாக விளக்கப்பட்டுள்ள நுால்.
முதல் அத்தியாயத்தில் கர்மயோகத்தை, தர்மத்தை நிலைநாட்ட, நெருங்கிய உறவினர்களைக் கூட எதிர்கொள்ள வேண்டும் என்பதை, வேதநாயகம் என்ற பாத்திரத்தின் வாயிலாக விளக்கியுள்ளார். புதிய ஜனனம் என்ற கதையில் தீயவர்களை அழிப்பதே தர்மம் என்று விளக்கியுள்ளார்.
அறவழி தவறாமல் நடக்கும் கந்தன் கதையை விளக்கி, தர்மவழியில் செல்பவர்களை இறைவன் ஏதேனும் வடிவத்தில் அவதாரம் எடுத்துக் காப்பார் என்றும் எழுதியுள்ளார்.
கீதையின் கருத்துகளுடன், திருக்குறள் கருத்துகளையும் இணைத்துச் சொல்வது மிக அருமை. இறுதியில், வராஹ புராணத்தில் சொல்லப்பட்ட கீதையின் மகிமையைச் சேர்த்திருப்பது சிறப்பு சேர்க்கிறது. ஆன்மிக அன்பர்கள் படிக்கத்தக்க நுால்.
– டாக்டர் கலியன் சம்பத்து