ஜெர்மனிய தத்துவ அறிஞரும், விஞ்ஞானியுமான ருடால்ப் ஸ்டைனர், வேளாண்மை அறிவியல் பற்றிய ஆற்றிய உரைகளின் தொகுப்பு நுால். தமிழில்மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது.
அட்டவணையிட்டு, சொற்பொழிவுகள் தொகுக்கப்பட்டுள்ளன. அந்த நாட்டு வேளாண் அறிவியல் கல்வி பாடத் திட்டத்தில் இந்த சொற்பொழிவுகள் வைக்கப்பட்டுள்ளன. செயற்கையாக தயாரிக்கப்படும் ரசாயன உரங்களால் ஏற்படும் தீமைகளையும், அவற்றை தவிர்க்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது.
இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவத்தை பறைசாற்றுகிறது. வேளாண்மையில் புதிய சிந்தனையை விதைக்கும் நுால்.
– ராம்