தமிழர்களின் மிகத்தொன்மை நாகரிகமான ஆதித்தநல்லுாரில் கிடைத்த அரும்பொருட்களை விரிவாக ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள நுால். திராவிட நாகரிகம் லெமூரியாக் கண்டத்தின் வாயிலாக உலகில் மேற்கிலும், கிழக்கிலும் பரவியது என ஆதாரங்களை முன்வைக்கிறது.
உலகிலே ஒப்பற்ற நாகரிகத்தை உருவாக்கியது திராவிட இனத்தவர் என்பதை வெளிநாட்டார் ஆய்வை எடுத்துக்காட்டி விளக்குகிறார். மட்பாண்டங்கள், மண்டை ஓடுகள், அரிய கருவிகள் பற்றி விரிவாக உணர்த்துகிறது.
திராவிட நாகரிக வாழ்வில் பொன், இரும்பு ஆகியவை அணிகலன்களாக வடிவமைத்து அணிந்ததை எடுத்துரைக்கிறது. பண்டைத் தமிழர் பயன்படுத்திய போர்க் கருவிகள் பற்றிய தகவல்கள், முதுமக்கட்தாழி, மட்பாண்ட வடிவமைப்புகளை தக்க ஆதாரங்களோடு காட்டுகிறது.
மேல்நாட்டுத் தொல்லியல் அறிஞர்களின் கருத்துகளைக் கொண்டு விரிவாக விளக்கும் நுால்.
– ராம.குருநாதன்