எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை நடிக்க வைத்த அனுபவங்கள், சினிமா மீதிருந்த காதல், கடந்து வந்த பாதை குறித்த அனுபவத்தை விவரிக்கும் நுால். பதினைந்து வயதில் எழுத துவங்கி, 17 வயதில், எம்.ஜி.ஆரை மனதில் வைத்து புதிய பூமி படத்திற்கு கதை எழுதியதை கடந்து, தயாரிப்பாளராக உயர்ந்தது வரை திரைப்பயணம் நீள்கிறது.
அரை நுாற்றாண்டுக்கு மேலாக, ஒப்பனை முகங்களின் ஊன்றுகோலாக, வாய்மொழியாக, நிழலுக்கு நிஜவடிவம் கொடுக்கும் படைப்பாளியாக இருந்துள்ளார். எம்.ஜி.ஆர்., குறித்து, புதிய தகவல்களை பேசுகிறார்.
கமலுடன் நடிப்பதை தவிர்த்தது, இடைவெளி விட்டு நடிக்க வந்தது, நாயகனை மாற்றக்கூறியது, அரசியல் பயணம் என, ஜெயலலிதா குறித்த தகவல்கள் ஏராளம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உடன் இருந்த நட்பு, அவர்களின் குணநலன்கள், படப்பிடிப்பு தளங்களில் செயல்பாடுகள், அரசியல் பிரவேசம் குறித்து, எளிய நடையில் சுவாரசியமாக விளக்கும் நுால்.
– டி.எஸ்.ராயன்