திராவிட இயக்க நாடகம், இதழ், இசை, வரலாறு ஆகிய தலைப்புகளில் வெளியாகியுள்ள படைப்புகளைத் திறனாய்வு செய்யும் நுால். இரண்டாம் பகுதியில், தனித்தமிழ் இயக்கம் பற்றிய விபரங்களைக் கூறுகிறது.
தமிழகத்தில், திராவிட இயக்க கட்சிக்கொள்கையை நிலை நிறுத்த, தலைவர்களின் எழுத்தும் பேச்சும் துணை நின்ற விதம், திராவிட இயக்க தோற்றம், கொள்கை, நீதிக்கட்சி பற்றிய தகவல் மற்றும் அதன் செயல்களை தொகுத்துள்ளார் ஆசிரியர். பகுத்தறிவு, சமுதாய சிந்தனை, திராவிட இயக்க கவிஞர்கள், நாடகா ஆசிரியர்கள் பற்றி சுருக்கமாக தகவல்கள் தரப்பட்டுள்ளன.
அவை, போதிய செய்திகளை உள்ளடக்கியுள்ளன. அடுத்து, தனித்தமிழ் இயக்க வளர்ச்சி பற்றியும், தனித்தமிழ் இயக்க அறிஞர்களில், ஒன்பது பேர் பற்றி சுருக்கமான விளக்கம் உள்ளது. தமிழகத்தில் துவங்கப்பட்ட இயக்கம் பற்றி மேலோட்டமாகத் தெரிந்துகொள்ள உதவும் நுால்.
– ராம.குருநாதன்