முகப்பு » கதைகள் » மனைவின்னா சும்மாவா...?

மனைவின்னா சும்மாவா...?

விலைரூ.130

ஆசிரியர் : டாக்டர் விஜயலட்சுமி மாசிலாமணி

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
வாழ்வில் அனுபவித்து உணர்ந்தவற்றை எண்ணிப் பார்த்து எழுதிய, 13 சிறுகதைகளின் தொகுப்பு நுால். எளிய நடையில் உள்ள, ‘நிலா அணில்’  சொந்தக் கதை போல தோன்றுகிறது. விமானப் பயணத்தில் ஏற்படும் அனுபவங்களை விவரித்துள்ள விதம் அருமை.

முதல் மரியாதையை நண்பருக்கு அரங்கத்திலும், மனைவிக்கு அந்தரங்கத்திலும் கொடுப்பது போல், எழுத்தின் திறன் அபாரமாக உள்ளது. பாரதி பாடல்களை மையமாக கொண்டு, ஒரு நாடகம் புனையப்பட்டுள்ளது. இது புது முயற்சி மட்டுமல்ல; புதுமையான முயற்சி.

மாற்றுத் திறனாளிகளுக்கு நடத்தும் திருமணம் சம்பந்தமான கதையில், வார்த்தைகள் வலிந்து விளையாடுகின்றன. சிறப்பான கருத்துக்களை கொண்டுள்ளது. நல்ல சிறுகதைகளை கொண்டுள்ள தொகுப்பு நுால்.
– சீத்தலைச் சாத்தன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us