தேர்ந்தெடுக்கப்பட்ட குறள்களின் மையப் பொருள் கொண்டு எழுதப்பட்ட, 133 குறுங்கதைகளின் தொகுப்பு நுால். எடுத்துக்கொண்ட குறளை, கதையின் துவக்கத்தில் விளக்கத்துடன் தந்திருப்பது சிறப்பாக உள்ளது.
கதைகளுக்கு வரையப்பட்டுள்ள படங்கள் சிறுவர் – சிறுமியருக்கு வாசிக்கும் ஆர்வத்தை துாண்டும். தற்கால சமூகச் சூழல், கிராமிய நிலை போன்றவற்றைக் காட்சிப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. அரசர், அமைச்சர், அரண்மனை மற்றும் புராணக் காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு அறங்கள் எடுத்துக் கூறப்படுள்ளன.
பெரும்பான்மையும், அம்புலி மாமா பாணியில் அமைந்துள்ளன. விலங்கு, பறவைகளை உள்ளடக்கிய உரையாடல், பஞ்ச தந்திரக் கதைகளை நினைவூட்டுகின்றன. கிணற்றை விற்கும் கதை, தெனாலிராமன், மரியாதைராமன் கதைகளைப் போன்று மனதில் நிற்கிறது. மழை சிறப்பு, விருந்தோம்பல், பிறர்பொருள் கவராமை, பழிக்குப்பழி தவிர்த்தல், மன்னர் கடமை, குற்றத்திற்கேற்ற தண்டனை, நல்லவரோடு நட்பு, ஊராருக்கு நன்றி ஆகிய தலைப்பிலான கதைகள் கவனத்தை ஈர்க்கின்றன.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு