சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர்., நகர், சென்னை-78. (பக்கம்: 156).
பல்வேறு ஆய்வரங்குகளில் பேராசிரியர் முனைவர் மு.முத்துவேலு படைத்த பன்னிரெண்டு ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாக அமைந்துள்ளது இந்த நூல். ஆசிரியர் சட்டமும் படித்தவர் என்பதால் சட்டத் தமிழ் தொடர்பாக நான்கு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. சட்டம் என்ற சொல் தமிழில் பயன்படுத்தப்படும் பொருளையும் அதன் வரையறையையும் ஆசிரியர் சிறப்பாக விளக்கியுள்ளார்.
தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் முதன் முதலில் மொழி பெயர்த்தவர் பி.சா.சுப்ரமணிய சாஸ்திரி என்பவர் என்றும் மொழி பெயர்ப்பு பணியை 1919ல் தொடங்கி 1956ல் நிறைவு செய்துள்ளார் என்னும் கருத்தையும் இந்த நூலில் ஆசிரியர் தெரிவித்துள்ளார். இலக்கியத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில் இந்த நூலைப் படைத்துள்ளார் ஆசிரியர்.