மனித வாழ்வு, ஜீவன் யாத்திரையில் உயிர் அடைந்திருக்கும் முடிவு பற்றி ஞானிகள் அருளிய தத்துவங்களை தொகுத்து தரும் நுால்.
மனம் மாசு இல்லாமலிருப்பதே பெரிய அறம் எனப் பதிவிட்டுள்ளது. தேவாரம், திருவாசகம், பெரிய புராணம் போன்ற சைவ திருமுறைகள், ஆழ்வார் பாசுரங்கள், அவ்வையார், வள்ளுவரின் அமுத மொழிகள் மேற்கோள் காட்டப்பட்டு உள்ளன.
மதத்தில் உள்ள 300 தத்துவங்கள் நிரல்படுத்தப்பட்டுள்ளன. இறையருள் பெற்றவர்கள் துணிவுடன் இருப்பர் என்பதை, ‘நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்’ என்ற பொன்மொழியில் விளக்கப்பட்டுள்ளது.
– புலவர் சு.மதியழகன்