ஆசிரியர்-டாக்டர்.எஸ்.அமுதகுமார். வெளியீடு:ஏகம் பதிப்பகம், அஞ்சல் பெட்டி எண்:2964,3,பிள்ளையார் கோயில்தெரு,2 ம் சந்து, முதல் மாடி,திருவல்லிக்கேணி, சென்னை-600 005. பக்கங்கள்:112.இந்த நூலில் ஒரு வரலாறு அடங்கியிருக்கிறது என்பேன்.வசதிகள் அதிகம் இல்லாத காலத்திலிருந்து மருந்துகள் அதிகம் கண்டுபிடிக்கப்படாத நாட்களிலிருந்து இன்று வரையிலும்-எந்த டாக்டர் எந்த நோயாளிக்கு எந்த நோயை என்னென்ன கஷ்டங்களுக்கிடையில் எப்படிக் குணப்படுத்தினார் என்பது தெளிவாக இதில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.இது போலப் பற்பல முக்கிய தகவல்கள்-இந்த நூலில் பரவிக் கிடக்கின்றது.இது மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு ஒரு சரித்திரப் புத்தகம் ஆகும்.