மேட்டுக்குடி வாலிபருக்கும், அவரது மாளிகை பணிப்பெண்ணான இசையந்திக்கும் இடையே ஏற்படும் காதலை சொல்லும் நாவல். சிறு வயதில் பெற்றோரை இழந்து, வயதானவருக்கு வாழ்க்கைப்பட்டு, சூழ்நிலையால் கைம்பெண்ணானதும், இரவில் தேடி வருவோருக்கு விருந்தாகும் இசையந்தியை, சமூகம் எப்படியெல்லாம் சூறையாடும் என்பதை உணர்ச்சி பூர்வமாக நகர்த்துகிறது.
மேட்டுக்குடி பெற்றோருக்கு பிறந்தாலும், குடும்பத்தால் ஏழைப் பெண்ணுக்கு நிகழ்ந்த அநீதிக்கு எப்படி கைமாறு செய்வது என கதாநாயகன் மனசாட்சியை உலுக்குகிறது. காதல் கதையாக இருந்தாலும், ஆண்டான், அடிமை என்ற பேதங்களில் வாழ்க்கை சூழலை விவரிக்கிறது.
சாட்டையடி, உயர்ந்த தண்டனை மாடம், இயற்கை வர்ணிப்பு, ஊர் கட்டுப்பாடு என, அக்கால பேச்சு வழக்குடன் வாசிப்பை மெருகூட்டுகிறது. கவிதை, கதை, நாவல் எழுத துடிப்போர் வாசிக்க உகந்தது.
– டி.எஸ்.ராயன்