ஆசிரியர்-டாக்டர் எஸ்.அமுதகுமார்.வெளியீடு:ஏகம் பதிப்பகம், அஞ்சல் பெட்டி எண்:2964,3,பிள்ளையார் கோயில்தெரு,2 ம் சந்து, முதல் மாடி,திருவல்லிக்கேணி, சென்னை-600 005. பக்கங்கள்:96.வாழ்க்கை நமக்கு கற்றுத்தரும் பாடங்களில் ஒன்று,உடலைச் சீராக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது தான்.உடலை பெருக்க விட்டுவிட்டு,அதனை நோய்களின் கருவூலமாக மாற்றிவிடும் எத்தனையோ பேரை நாம் பார்த்திருக்கிறோம்.நோய் வராமல் தடுக்க வேண்டும் என்றால், உடலை சீராக வைத்துக் கொள்ள வேண்டும்.உடலைச் சீராக வைத்துக் கொள்ள,மிகவும் உதவியாய் இருப்பது நடைப்பயிற்சி. நடைபயிற்சிக்கு போகும் போது கவனிக்க வேண்டியவை எவ்வளவோ இருக்கின்றது என்பதை டாக்டர் அமுதகுமார் எழுதி நலம் தரும் நடைப்பழக்கம் என்ற இந்தப் புத்தகத்தை படித்த பிறகு தான் புரிகிறது. நடப்பதற்கென்று பல பயனுள்ள குறிப்புகளை டாக்டர் அமுதகுமார் இந்தப் புத்தகத்தில் தந்திருக்கிறார்.