இந்தியாவின் பெரும்பகுதியை ஆண்ட அவுரங்கசீப் பற்றிய தகவல்களை நடுநிலையோடு ஆராய்ந்துள்ள நுால். விவாதத்திற்குரிய வரலாற்று ஆதாரங்களைக்கொண்டு எழுதப்பட்டுள்ளது. எளிய தமிழில் சுவையாகப் படைத்திருக்கிறார். மதவெறி கொண்டவர் என்ற கருத்தையும் முன்னிலைப் படுத்தியுள்ளார். ஹிந்துக்களுக்கு ஆதரவாக இருந்துள்ளார் எனவும் பதிவு செய்துள்ளார்.
உண்மை வரலாற்றுப் பதிவுகளை விட புனைவுகளே அதிகம் உள்ளன என்று குறித்துள்ளார். வாரிசு அரசியலில் சகோதரனைக் கொன்றது, தந்தையை சிறையிட்டது, ஹிந்துக்களை ஆட்சி நிர்வாகத்தில் பணியமர்த்தியது, தக்காணம் வரை சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தியது, மதுபானம் தயாரிப்பை நிறுத்த எடுத்த முயற்சி போன்றவை அவர் ஆட்சிகாலத்தில் நிகழ்ந்திருப்பதை விருப்பு வெறுப்பின்றி தந்துள்ளது. அவுரங்கசீப் குறித்த தகவல்களை அறிய உதவும் நுால்.
– ராம.குருநாதன்