பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் கேடுகளை விளக்கி விழிப்புணர்வு தரும் நுால். மொத்தம் 18 கட்டுரைகள் தொடர் போல் அமைந்துள்ளன. பொருத்தமான படங்களுடன் நேரில் பேசுவது போல் தகவல்களை தருகிறது.
முதலில், ‘பிளாஸ்டிக் எனும் அணுகுண்டு’ என்ற தலைப்பிலான கட்டுரை உள்ளது. பிளாஸ்டிக் கண்டறிந்து பயன்பாட்டுக்கு வந்தது முதல், சூழலில் அது ஏற்படுத்திய தாக்கம் வரை வரலாற்றை சுருக்கமாக சொல்கிறது. பிளாஸ்டிக்கின் ஒவ்வொரு வடிவம் குறித்து கேள்வி எழுப்பி, உண்மைகளை விளக்குகிறது.
இறுதியில், பிளாஸ்டிக் பொருளுக்கு மாற்றாக பயன்படுத்த ஏற்ற பொருட்கள் பற்றி அழகாக எடுத்துரைக்கிறது. விழிப்புணர்வு ஏற்படுத்தும் நுால்.
– ஒளி