இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பற்றிய விமர்சனத்துடன் பல்வேறு கருத்துக்களை முன் வைக்கும் நுால். புரட்சிக் கருத்தால், புதிய இந்தியாவை உருவாக்க வழி சொல்கிறது. அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பை அரசே தர வேண்டும். ஜாதியின் பெயரால் வாய்ப்பு வழங்காமல், அனைவருக்கும் சம வாய்ப்பு தர வேண்டும் என்ற சிந்தனையை முன் வைக்கிறது.
ஐரோப்பியரான இங்கிலாந்து நாட்டு வியாபாரிகள், இந்தியாவை அடிமைப்படுத்தி ஆட்சியை கைப்பற்றினர். இங்கிருந்த செல்வத்தை இங்கிலாந்துக்கு கொண்டு சேர்த்தனர். அவர்களிடம் இருந்து விடுதலை பெற்ற பின், ஆட்சிக்கு வந்தவர்களில் சிலர், பணத்தை அபகரித்து ஊழல் புரிந்த விபரங்களை எடுத்துரைத்து சிந்திக்க துாண்டும் நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்