தத்துவஞானி, ஆன்மீக குரு என பலநிலைகளில் போற்றப்படும் ஓஷோவின் பொன் மொழிகள் கொண்ட நுால். பல சூழல்களில் வெளிப்படுத்திய கருத்துக்களின் தொகுப்பாக உள்ளது.
‘இருளை ஒளி அகற்றுவது போல், பயத்தை அன்பு விலக்கி விடுகிறது’ என மிகவும் எளிமையாக ஒளி பாய்ச்சுகிறது. ஞானம் தந்த ஊரைகளில் வெளிப்பட்ட நற்சிந்தனையின் வடிவமாக உள்ளது. அறிவுக் கண்ணை திறக்கும் வகையில் அமைந்தது. எந்த நெருக்கடியிலும் பயன்படுத்த ஏற்ற வல்ல கருத்து செறிவு மிக்கது.
‘இருளுக்குள் பயந்து கண்களை மூடிக் கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை’ என்பது போன்ற அருள் மொழி செயல் வேகத்தை துாண்டும்.
– ராம்