ஞானக் களஞ்சியமாக உருவாக்கப்பட்டுள்ள நுால். கர்மா, பக்தி, ஞானம், தியான யோகம், மனைவி, பணம், காமம், குரு, உயிர், ஜீவஒளி, ஆறு ஆதாரங்கள், பரியங்க யோகம், மரணம், மீண்டும் பிறப்பு, அணுக்களின் தொகுப்பே உடல், பொருள், ஆவி, நல்மொழிகள் என்பது போன்ற, 84 தலைப்புகளில் படைக்கப்பட்டுள்ளது.
மாமரம் தென்னையாக மாற முயற்சிக்கக் கூடாது. மனித ஜென்மத்துக்கு என்ன கடமையோ, கர்மாவோ அதையே செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது. யோகத்தின் சிறப்பை எளிதில் அறியும் வகையில் தரப்பட்டுள்ளது. யோகத்தின் மூலம் கடவுளின் நிலையை அடைய முடியும். மனிதப் பிறப்பு எடுத்தால், அன்னையே ஆயினும் யோகத்தால் தான் சிவனை அடைய முடியும் என்று உரைக்கிறது.
ஆதிசங்கரர், ரமணர், ராமகிருஷ்ணர் போன்ற மகான்கள் ஒளியாக பிரம்மத்தில் இருப்பதை கண்ணாடி முன் அமர்ந்து தியானம் செய்யும்போது பார்த்திருப்பதாக எழுதியிருப்பது வியப்பில் ஆழ்த்துகிறது. யோகம் கற்று மரணமிலாப் பெருவாழ்வு வாழ வழிகாட்டும் ஞான நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்