கி.வா.ஜகந்நாதன் சென்னை பல்கலையில் ஆராய்ச்சி மாணவராக இருந்தபோது எழுதிய ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பே இந்தப் புத்தகம். தமிழ்க் காப்பியங்களின் அமைப்பு முறை, அவற்றில் பொதிந்துள்ள கவிச்சுவை, இலக்கிய வரலாறு, அதன் வளர்ச்சி போன்றவை திறனாய்வு செய்யப்பட்டுள்ளன.
தொல்காப்பியத்தில் எழுத்திலக்கணத்திலும், சொல்லிலக்கணத்திலும் காணப்படாத பல புதிய அமைப்புகள், கட்டுகள் பின் புகுந்தன; பல பழைய மரபுகள் வழக்கொழிந்தன என்பது இவரது கூற்று. அடுக்கடுக்கான ஆதாரங்களை முன்வைத்து, இந்த கருத்து நிலைநாட்டப்பட்டு உள்ளது.
இதேபோல், பெருங்கதைச் சோலையின் கம்பீர நடை குறித்த விவரிப்பு, சிந்தாமணிக்குப் பின் அதிகரிக்கத் துவங்கிய விருந்த யாப்பு, தொல்காப்பியத்திற்கு முன் உண்டான இலக்கணக் கட்டுகள் உடபட பல்வேறு தகவல்களை தரும் நுால்.
– பெருந்துறையான்