பிரபல எழுத்தாளர் புதுமைப்பித்தனின் வாழ்க்கை நிகழ்வுகளை தொகுத்து தரும் நுால். பல தரப்பிலும் தகவல் சேகரித்து கவனமுடன் எழுதப்பட்டுள்ளது. இந்த புத்தக ஆசிரியருக்கும், புதுமைப்பித்தனுக்கும் உள்ள நெருக்கம், அது தொடர்பான அனுபவங்கள் துவக்கத்தில் இருந்து வெளிப்படுகிறது. முதல் அத்தியாயம், குல வழக்கம் என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. வாழ்வில் புதுமைப்பித்தன் வெளிப்படுத்திய பகடிகள் பல இடங்களில் மிக இயல்பாக, பேச்சு மொழியில் பதிவாகியுள்ளது.
பள்ளிப்படிப்பு, குடும்ப வாழ்க்கை, அலைச்சல்கள், படைப்புகளின் பின்னணி, உறவுகள், தொடர்புகள், பணிகள் என மிகவும் அரிதின் முயன்று தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளது தெரிகிறது. அவை எல்லாம் மிகவும் இயல்பாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. வாசிக்க சுவாரசியமாக உள்ளது. படைப்பிலக்கியத்தில் கொடிகட்டி பறந்தவரின் வாழ்க்கையில் பல்வேறு அம்சங்களை அறிய உதவும் நுால்.
– மதி