ஜவஹர்லால் நேரு நுாற்றாண்டு விழாவையொட்டி வெளியிடப்பட்ட புத்தகம். விடுதலைப் போராட்ட அரசியலில் ஏற்பட்ட ஈர்ப்பு, பல கசப்புகளையும் மீறி நேரு மீது வைத்திருந்த மதிப்பை உன்னதமாக விவரித்துள்ளார் ஆசிரியர். பல இதழ்களில் எழுதிய கட்டுரைகளும், மேடைகளில் நிகழ்த்திய உரைகளும் தொகுக்கப்பட்டு உள்ளன.
நேருவை ஆசானாக ஏற்றது ஏன், என்பது துவங்கி, அவரது சமூக சீர்திருத்த சிந்தனை, கட்டுக்கோப்பாக இயங்க மேற்கொண்ட முயற்சிகள், மொழியியல் கொள்கை போன்ற பல்வேறு தலைப்புகளில் கருத்துகள் விளக்கப்பட்டுள்ளன.
சிப்பாய் கலகம் உள்ளிட்ட புரட்சிப் போராட்டங்களின் நோக்கமும், திட்டமிடலும், அதில் தவறான புரிதல் காரணமாக ஏற்பட்ட சச்சரவுகள் குறித்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றை மேற்கோளாக காட்டி, இந்த அனுபவங்களே தன்னை சரித்திர எழுத்தாளனாக உருவாக்கியதாக தெரிவித்துள்ளார் இந்த நுால் ஆசிரியர்.
– மேதகன்