அரசியல்வாதிகளுக்குப் பாடம் கற்பிக்கும் அரிச்சுவடியாக திகழும் நுால். படிக்காத மேதை காமராஜரிடம் இருந்த எளிமை, அரசியல், நாகரிகம், விளம்பரம் விரும்பாமை, பாராட்டை விரும்பாமை, பதவி விரும்பாமை போன்ற உயர்ந்த குணங்களால் உன்னதத் தலைவராக விளங்கினார் என்பதை எடுத்துரைக்கிறது.
மாற்றாரை மதிக்கும் மாண்பு, தமிழை ஆட்சி மொழியாக்கிய நிகழ்வு, கல்லுாரிகளில் தமிழ் வழிக் கல்வியை அமல்படுத்தியது உட்பட பல நிகழ்வுகள் விவரிக்கப்பட்டு உள்ளன. அமராவதி, மணிமுத்தாறு, வைகை, சாத்தனுார், வாலையாறு, மங்களம், ஆரணியாறு, கிருஷ்ணகிரி கீழ்பவானி, கேரளாவில் மலம்புழா ஆகிய அணைகள் காமராஜர் கட்டியவை என வரிசைப்படுத்தியுள்ளார். அரசியலில் நுழைய விரும்பும் அறிவாளிகளுக்கு அரிச்சுவடி நுால்.
– புலவர் சு.மதியழகன்