பாகிஸ்தானை தனி நாடாக்க கோரிய போது, அது குறித்து ஆய்வு செய்த அம்பேத்கர் எழுதிய அறிக்கையின் தமிழாக்க நுால்.
நுட்பமான கேள்விகளை எழுப்பி விடை தேடும் வகையில் புள்ளி விபரங்களுடன், ஐந்து பாகங்களாக எழுதப்பட்டுள்ளது. கோரிக்கையை அலசி விவாதத்தை எழுப்புகிறது. இஸ்லாமியரின் கோரிக்கை பற்றி முதல் பாகத்தில் விரிவாக உள்ளது. அடுத்து, பாகிஸ்தான் வேண்டாம் என, ஹிந்துக்கள் தரப்பில் முன் வைக்கப்பட்ட வாதம் விரிவாக அலசப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் உருவாகாவிட்டால் என்ன நடக்கும் என்ற கேள்வியை முன் வைத்து கருத்து அலசப்பட்டு உள்ளது. இறுதியாக, பாகிஸ்தானை யார் தீர்மானிப்பது என்ற கேள்வியுடன் அமைந்துள்ளது. இந்த அறிக்கை நுாலான போது, அறிமுகம் ஒன்றையும் அம்பேத்கர் எழுதியுள்ளார். இந்திய வரலாற்றில் முக்கிய நிகழ்வை அலசி விவாதத்தை எழுப்பும் வகையில் உள்ளது. வரலாற்றில் ஆர்வம் உள்ளோர் கண்டிப்பாக படிக்க வேண்டிய நுால்.
– ஒளி